தொலைநோக்கு 2025 என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித்திட்டம்

2019-08-17 | செய்தி

தொலைநோக்கு 2025 என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித்திட்டம்

2017இல் அமுல்படுத்தப்பட்ட தொலைநோக்கு 2025 என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித்திட்டமானது இலங்கையில் வெற்றிகரமான வர்த்தக சமூகமொன்றினை தோற்றுவிப்பதற்கும் சிறிய, நடுத்தர தொழில் முயற்சித் துறையின் வினைத்திறனையும் உற்பத்தி திறனையும் மேம்படுத்துவதற்கு 2019இல் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.

இப்பின்னணியின் கீழ் மேற்குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் 2ஆவது கண்காட்சி நிதியமைச்சினால் அநுராதபுரம், ஹரிச்சந்திர மைதானத்தில் 2019 ஜுலை 24 - 27 வரை நடாத்தப்பட்டது.

நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி துறைகளில் தொழில்வாய்ப்புகளை வழங்குவது தொடர்பான அறிவினை பகிர்ந்து கொண்டு இந்நிகழ்வில் பங்கேற்றது.

Photos