நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி பிரிவானது காணிப்பிரிவு, கிராமிய வீதி அபிவிருத்தி பிரிவு என்ற இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்குகின்றது.
காணிப்பிரிவு
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் காணிப்பிரிவானது நெடுஞ்சாலை துறை கருத்திட்டங்களின் புதிய நிர்மாண ஃ புனரமைப்புக்கான காணி சுவீகரிப்புச் செயன்முறையுடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளையும் வசதிப்படுத்துவதற்கும் தொடர்புடைய ஆர்வலர்கள் ஈடுபடுகின்ற நிறுவனங்களுடன் முறையான ஒருங்கிணைப்பு மட்டத்தினை பேணுவதற்கும் பொறுப்புடையதாகும்.
பிரிவின் வகிபாகம்;
- காணி சுவீகரிப்புச் சட்டத்தின் 2ஆம் பிரிவிற்கு அமைய சுவீகரிப்பு முன்மொழிவுகள் தொடர்பில் கௌரவ அமைச்சரின் பரிந்துரைகளை காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சுக்கு சமர்ப்பித்தல் அத்துடன், புதிய வீதி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் காணிகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு 38(ஆ) இடைக்கால கட்டளையின் கீழ் வெற்றிட உரித்தினைப் பெற்றுக் கொள்ளல்.
- காணி சுவீகரிப்பு சட்டத்திற்கு அமைவாக பெற்றுக் கொள்ளப்பட்ட காணிகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை செயலாற்றுதல்.
- பெற்றுக் கொள்ளப்பட்ட காணிகளுக்கான நட்டஈட்டு கொடுப்பனவு மீதான நடவடிக்கைகளை எடுத்தல்.
- காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு, வீதி கருத்திட்டங்கள், விலை மதிப்பு திணைக்களம், நில அளவைத் திணைக்களம்,பிரதேச செயலகங்கள் மற்றும் அரசாங்க அச்சகம் போன்றவற்றுடன் ஒருங்கிணைத்தல்.
- காணி சுவீகரித்தல் மற்றும் மீள் குடியேற்ற விசேட குழுகூட்டங்களை நடாத்துதல், குழு தீர்மானங்களை தொகுத்தலும் அவற்றை அறிவித்தலும்.
- சனாதிபதி செயலாகம், பிரதம அமைச்சரின் அலுவலகம் மற்றும் பாராளுமன்ற குழுக்கள் போன்றவற்றினால் கோரப்பட்ட அறிக்கைகளை சமர்ப்பித்தல்.
- பொதுமக்கள் துயரங்களை தீர்த்தலில் உதவுதல்.
- புதிய வீதிகளை நிர்மாணிப்பதற்கு அல்லது வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான காணிகள் சுவீகரிப்பின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை மீள் குடியமர்த்துவதற்கு காணிகளை கொள்வனவு செய்வதற்காக காணிக் கொள்வனவு குழு ஊடாக அவசியமான ஒழுங்குகளை மேற்கொள்ளுதல்.
- காணி சுவீகரிப்புச் சட்டத்தின் 39(1)ஆம் பிரிவின் கீழ் இரத்துச் செய்தல். ஆயினும், வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அவை தேவையற்றவை என பின்னர் இனங்காணப்பட்டதுடன் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சுக்கு 39(அ) (1)ஆம் பிரிவின் கீழ் உரித்து மாற்றுவதன் மீது கௌரவ அமைச்சரின் பரிந்துரைகளை சமர்ப்பித்தல்.
- சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் கட்டளை வழங்கப்பட்டதன் பின்னர் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அவை தேவையற்றது என இனங்காணப்படுகின்ற காணிகளுக்காக காணி சுவீகரிப்புச் சட்டத்தின் 50ஆம் பிரிவின் கீழ் இரத்துச் செய்தல் மீதான பரிந்துரைகளை சமர்ப்பித்தல்.
கிராமிய வீதி அபிவிருத்திப பிரிவு - மகநெகும
கிராமிய வீதி அபிவிருத்திப பிரிவானது நாட்டின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்காக சிறந்த கிராமிய வீதி வலையமைப்பினை மேம்படுத்தும் நோக்குடன் கடந்த 15 வருடங்களாக தொழிற்பட்டு வருகின்றது. பிரிவின் முக்கிய தொழிற்பாடுகள் பின்வருமாறு.
- வருடாந்த பணி நிகழ்ச்சித்திட்டங்களையும் சுற்றறிக்கைகளையும் தயாரித்தல்.
- வருடாந்த திட்டத்திற்கும் சுற்றறிக்கைகளுக்கும் அமைவாக கிராமிய வீதி கருத்திட்ட முன்மொழிவுகளை சேகரித்தல்.
- வேண்டப்பட்ட பரிந்துரைகளை பெற்றுக் கொள்ளலும் மதிப்பீடுகளை தயாரித்தலும்
- நடைமுறைப்படுத்தல் முகவராண்மைகளுக்கான ஒதுக்கீடுகளை வழங்குதல்.
- நடைமுறைப்படுத்தல் முகவராண்மை அலுவலர்களுக்காக விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல் கருத்திட்டங்களுடன் ஈடுபடுகின்ற சமுதாயத்தினை அடிப்படையாக கொண்ட நிறுவனங்களுக்கு அவசியமான அறிவுறுத்தல்களை வழங்குதல்.
- கள பரிசோதனைகளையும் அவதானிப்புகளையும் நடாத்துதல்
- அமைச்சுக்கான கொடுப்பனவு பட்டியல்களை சேகரித்து கொடுப்பனவுகளை பேணுதல்.
- முன்னேற்ற மதிப்பீட்டினை கண்காணித்தல்